14 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலானப் போதைப்பொருளுடன் இளம்பெண்கள் கைது!

மலேசியாவின் KLIA சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகத்திற்குரிய பெண்களைச் சோதனையிட்டதில் அவர்களிடமிருந்து கஞ்சா வகை போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் தெரிவித்தார்.

கடந்த 21ஆம் திகதி விமான நிலையத்தில் உள்ளூர் பெண் ஒருவரின் நடவடிக்கை சந்தேகிக்கும் வகையில் இருந்ததாகவும் அவரைச் சோதனையிட்டதில் அவரிடமிருந்து போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் நெகிரி செம்பிலான் செண்டாயானில் உள்ள அவருடைய வீட்டிலிருந்து RM 12.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 153.7 கிலோ எடையுள்ள கஞ்சா வகை போதைப்பொருளைக் காவல்துறை பறிமுதல் செய்ததாகவும் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர்  தெரிவித்தார்.

ஏப்ரல் 23 அதே KLIAஅனைத்துலக விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பெண்ணின் ஒருவரின் நடவடிக்கை சந்தேகிக்கும் வகையில் இருந்ததாகவும் அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் RM 2.4 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 30 கிலோ எடையுள்ள கஞ்சா வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் னுயவரம ளூயணநடi முயாயச தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இரு பெண்களில் ஒருவர் உள்ளூர்வாசி என்றும் மற்றொருவர் வெளிநாட்டுப் பெண் என்றும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் 34 வயது 24 வயதுள்ள இளம்பெண்கள் என்றும் மேலதிக விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருவதாகவும் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர்  தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles