ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட செயற்குழுவினரின் இராஜினாவை அடுத்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட செயற்குழுவினரின் இராஜினாமாவை விளையாட்டுத்துறை அமைச்சர் இன்று புதன்கிழமை ஏற்றுக்கொண்டார்.
அதற்கமைய, 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 31 மற்றும் 34 ஆம் பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் இன்று முதல் தற்காலிகமாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் கொண்டுவரப்படுகின்றன.
கிரிக்கெட் விளையாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதற்கும், கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்வதற்கும் ஒரு குழு விரைவில் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
