ஜப்பானிலிருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றில் தனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் பயணியை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் கூறப்படும் ஆடவர்மீது இன்று வியாழக்கிழமை குற்றம் சாட்டப்பட்டது.
ஏரியல் லுத்ஃபியான் முவரிஃபின் எனும் அந்த ஆடவர், ஏப்ரல் 15ஆம் தேதி ஜப்பானின் ஒக்கினாவா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஸ்கூட் விமானத்தில் அந்தக் குற்றச்செயலைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தோனீசியாவைச் சேர்ந்த அந்த 20 வயது ஆடவர், அப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டார் எனக் கூறப்பட்டது.
இன்று வியாழக்கிழமை பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் அந்தப் பெண் பயணி தமது இருக்கையிலிருந்து எழுந்து சென்று விமானச் சிப்பந்திகளின் உதவியை நாடினார். அவர்கள் பின்னர் விமானியிடம் இதுகுறித்துப் புகாரளித்தனர்.
விமானம் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியதும் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கு மீண்டும் மே 15ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பெண்ணை மானபங்கம் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏரியலுக்கு மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
