செம்மணி புதைகுழி: கறுப்பு நிற மண்ணில் புதைந்திருந்த சான்றுப்பொருள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய தினம் ஓர் எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டது. இதன்மூலம், அங்கு இதுவரை 240 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாவது கட்டமாக இன்று – ஏப்ரல் 30ஆம் திகதியும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்றைய தினம் மீட்கப்பட்ட எலும்புக்கூடு நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டிருந்தது. இதேவேளை, புதைகுழிக்குள் சந்தேகத்துக்கிடமான முறையில் கறுப்பு நிற மண் காணப்பட்ட பகுதியும் அரித்து எடுக்கப்பட்டது. இதன்போது, நாணயக்குற்றி ஒன்று மீட்கப்பட்டது. இது சான்று பொருளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

நாளைய தினம் விடுமுறை தினம் என்பதால்  அகழ்வு பணிகள் அரை நாளே முன்னெடுக்கப்படவுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles