25 இலட்சம் டொலர் திருட்டு: இறந்த அதிகாரி கொல்லப்பட்டாரா?

தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படும் திறைசேரியின் வெளிவளங்கள் திணைக்கள உதவி பணிப்பாளரின் உடலில் வெட்டுக் காயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், அவரின் மரணம் அல்லது கொலையா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

திறைசேரியிடமிருந்து மின்னஞ்சல் மாறாட்டம் மூலமாக 25 இலட்சம் டொலர் திருடப்பட்டமை தொடர்பில் உயிரிழந்த வெளிவளங்கள் திணைக்கள உதவி பணிப்பாளரான ரங்க ராஜபக்ஷவுடன் சேர்த்து நால்வர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், ரங்க ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி பகுதியிலுள்ள அவரின் வீட்டின் பின்புறத்திலிருந்து சடலமாக இன்று – ஏப்ரல் 30ஆம் திகதி மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பணம் திருடப்பட்டமை தொடர்பான விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களம் அவருக்கு இரு தடவைகள் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், அவர் சி. ஐ. டி. முன்பாக முன்னிலையாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles