பன்னாட்டு குற்ற அமைப்புகளை ஒடுக்கும் தேசிய பாதுகாப்பு ஆணையில் ட்ரம்ப் ஒப்பம்

தேசிய பாதுகாப்பு ஆணையொன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார்.

இந்த ஆணையானது அமெரிக்கர்களை தாக்குவதற்காக வெளிநாட்டு அதிகார வரம்புகளில் செயல்படும் பன்னாட்டு குற்ற அமைப்புகளுக்கு எதிராக இணையவழி கருவிகளைப் பயன்படுத்த கூட்டாட்சி சட்ட அமலாக்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.

அமெரிக்க அரசாங்கத்தின் வழிகாட்டுதல், கட்டுப்பாடு மற்றும் அதிகாரத்தின் கீழ் இந்த இணையவழி நடவடிக்கைகளை நடத்த உதவுவதற்காக, தனியார் துறையின் திறனையும் புதுமையையும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அவர் தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

மிரட்டிப் பணம் பறிக்கும் மென்பொருள் தாக்குதல்கள், நிதி மோசடிகள் மற்றும் பிற குற்றங்களை ஒடுக்க இந்த சட்டம் பயன்படும் என செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

இத்திட்டம் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் நீதித் துறையின் மேற்பார்வையின் கீழ் அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles