காங்கோவின் புகாவு (Bukavu) நகரில் நேற்று அருகருகே இருந்த பாடசாலைகளில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தது 26 மாணவர்கள் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்தனர் என மாகாண அரசு தெரிவித்துள்ளது.
19 மாணவிகளும் 7 மாணவர்களும் உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
முதலில் வீடொன்றில் ஆரம்பமாகிய தீ பின்னர் பாடசாலைகளுக்கும் பரவியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
