உக்ரைனின் துறைமுக நகரங்களான ஒடிசா மற்றும் மைகொலைவ் பகுதிகளில் அமைந்துள்ள துறைமுக உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலில் மூவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கருங்கடல் பகுதியில் இயங்கிய ரஷ்ய கடற்படை கப்பல்களை குறிவைத்து உக்ரைன் பதிலடி தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடையும் அபாயம் நிலவுவதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
