லொறியுடன் மோதிய கார் தீப்பிடித்ததில் இரு இளம்பெண்கள் பலி!

மலேசியாவின் ஜோகூர், யொங் பெங்கில் லொறியுடன் மோதிய கார் தீப்பிடித்து எரிந்ததில், 22வயதுடைய இரு இளம் பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேற்று மாலை 4 மணிளவில் Batu 1, Jalan Yong Peng-Ayer Hitam சாலையில் இவ்விபத்து நிகழ்ந்தது.

தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, Perodua Myvi கார் சுமார் 80 விழுக்காடு தீயில் எரிந்து சேதமடைந்திருந்தது.

காரின் ஓட்டுநர் இருக்கையிலும், முன்பக்கப் பயணிகள் இருக்கையிலும் இருந்த இரு பெண்களும் வெளியேற முடியாமல் சிக்கியிருந்தனர்.

தீயணைப்புப் படையினர் முதலில் தீயை அணைத்த பின்னர், சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி இருவரின் உடல்களையும் காரிலிருந்து மீட்டனர்.

இருவரின் உடல்களும் அடையாளம் காண முடியாத அளவுக்குத் தீயில் கருகியிருந்தன.

பின்னர், அவர்கள் முறையே காரோட்டுநர் மற்றும் முன் இருக்கையில் பயணித்த Siti Nurmaisarah Abd Jalil என அடையாளம் காணப்பட்டனர்.

இருவரின் சடலங்களும் மேல் நடவடிக்கைக்காக போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதனிடையே, விபத்தில் சம்பந்தப்பட்ட லொறியில் பயணம் செய்த, 30 வயது மதிக்கத்தக்க 3 இளைஞர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles