இந்தியா வசம் 190 அணு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த Federation of American Scientists என்ற ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்தியாவில் 160 அணுகுண்டுகள் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் ஏவுகணைகளுக்காக மேலும் 30 அணுகுண்டுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதனையும் சேர்த்து தற்போது மொத்தமாக 190 அணுவாயுதங்களை இந்தியா வைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இந்தியா தனது ராணுவத் தேவைகளுக்காக 140 முதல் 225 அணுஆயுதங்களை தயாரிப்பதற்குத் தேவையான புளுட்டோனியத்தை சேமித்து வைத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
