திருப்பதியில் 3 மாதங்களுக்கு வி.ஐ.பி. தரிசனம் ரத்து!

திருமலை – திருப்பதியில் மூன்று மாதங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோடைக்காலம் தொடங்கியுள்ளதாலும், பாடசாலைகளுக்கு விடுமுறை என்பதாலும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குப் அதிகளவில் பிரவேசிக்கின்றனர்.

வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து வெளியே பாட்ட கங்கம்மா கோயில் அருகில் உள்ள தரிசன வரிசையில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர்.

தர்ம தரிசனத்துக்கு 24 மணி நேரமும், 300 ரூபாய். விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.

நேரடி இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை வெள்ளிக்கிழமை முதல் கோடை விடுமுறை முடியும் வரை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தர்களும், அவர்களின் பெற்றோர்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.

எனினும் அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இனி தரிசன பற்றுசீட்டுகள் இல்லாமல் ஏழுமலையான் தரிசனத்துக்காக திருமலைக்கு வரும் பக்தர்கள் காத்திருப்பு அறைகளில் காத்திருந்து மட்டுமே தரிசனத்துக்குச் செல்ல முடியும்.

எனவே பக்தர்கள் தங்கள் பயணத்தை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதனால், கோடைக்காலம் முடியும் வரை, மூன்று மாதங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், அதோடு திருப்பதியில் சர்வ தரிசன டோக்கன் வழங்குவதையும் ரத்து செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles