லண்டனில் துப்பாக்கிச்சூடு; உயிருக்கு போராடும் இளைஞர்!

லண்டனின் பிரிக்ஸ்டனில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், காயமடைந்த இளைஞர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மேலும் மூவர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோல்ட்ஹார்பர் லேனில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சம்பவ இடத்தில் முதலுதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காணும் பணியில் புலனாய்வாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles