கனடாவில் இரு கார்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி

வடக்கு டெல்டாவில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் நிகழ்ந்த இரண்டு கார்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்டா காவல் துறையின் தகவல்படி, பிற்பகல் 3 மணிக்குப் பிறகு 118ஆவது தெரு மற்றும் 75ஏ அவென்யூ சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தின் தீவிரத்தால் ஒரு கார் மரத்தின் மீது மோதி நசுங்கியதுடன், மற்றொரு கார் வீட்டின் வேலியையும் தீயணைப்புத் தூணையும் இடித்துத் தள்ளிக்கொண்டு குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தது.

இந்த விபத்தில் ஒரு காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காயமடைந்தவர்களை மீட்க 10 அம்புலன்ஸ் வாகனங்கள் விரைவாகச் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

காயமடைந்த ஐந்து பேரில் இருவரது நிலைமை கவலைக்கிடமாகவும், மற்ற மூவரின் நிலைமை சீராக இருந்தாலும் பலத்த காயங்களுடன் இருப்பதாக பி.சி. அவசர சுகாதார சேவை தெரிவித்துள்ளது.

விபத்து நடந்த பகுதியில் தடயங்களைச் சேகரிப்பதற்காகச் சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுப் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.

விபத்துக்கான சரியான காரணம் குறித்து தீவிரமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles