இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து தீவக மீனவர்கள் கறுப்புக்கொடி போராட்டம்

இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய அத்துமீறல் மற்றும் சட்டவிரோத அடிமடி இழுவை மீன்பிடி நடவடிக்கைகளைக் கண்டித்து, யாழ்ப்பாணம் – தீவகப் பகுதி மீனவர்கள் இன்று புதன்கிழமை கடலில் இறங்கி கறுப்புக்கொடி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிகட்டுவான் இறங்குதுறை கடற்பகுதியில் படகுகளில் கடலுக்குள் சென்ற தீவக மீனவர்கள், கறுப்புக்கொடிகளை ஏந்தித் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன், ஜனாதிபதிக்கு உடனடியாக நடவடிக்கை கோரி அவசரக் கோரிக்கை மனுவையும் கையளித்தனர்.

காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் தொண்டி பகுதிகளைச் சேர்ந்த இந்திய இழுவை மடி விசைப்படகுகள், கடந்த ஜூலை 16 முதல் 18 ஆம் திகதி வரை மூன்று நாள்களில் மட்டும், தீவகத்தைச் சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட பாரம்பரிய மீனவர்களின் 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நண்டு வலைகளை இழுத்தழித்து சேதப்படுத்தியுள்ளன என்று மீனவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்தத் தொடர்ச்சியான அத்துமீறல்களால் வடக்கின் கடல்சார் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் இலங்கையின் கடல்வள உரிமைகள் கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles