ராஜ Cafe உரிமையாளர்
வயது 68
புங்குடுதீவு, Sri Lanka (பிறந்த இடம்) கொழும்பு, Sri Lanka La Courneuve, France
திதி:11/05/2026
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் அடப்பகுளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் La courneuve- ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் சண்முகநாதன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் இருப்பிடமே பாசத்தின்
உறைவிடமே எங்கள் அப்பா
ஆசையாய் இருக்குதப்பா சிரித்த உங்கள்
முகம் பார்க்க வந்திட மாட்டீர்களா?
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
ஐந்து வருடம் விரைந்தே போனதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம்-ஆனாலும்
உங்கள் முகம் பார்க்க துடிக்கும் வேளையில்
நெஞ்சில் இரத்தம் சுண்டுதப்பா
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எம்
நெஞ்சை விட்டு அகலாது உங்கள் நினைவுகள்
இதயதுடிப்பு உள்ளவரை எங்கள்
இதய தீபம் நீங்கள் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்: மனைவி கமலாதேவி பேரப்பிள்ளைகள் : ஹரிஷன் விஷாளன் திலக்ஷனா.
