வயது 82
நெடுந்தீவு, Sri Lanka (பிறந்த இடம்) முல்லைத்தீவு, Sri Lanka பிரான்ஸ், France
திதி: 18/04/2026
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த குட்டிப்பிள்ளை தர்மலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து ஆனாலும்-
ஆறாது உங்கள் பிரிவின் துயரம்
தீராது எங்கள் சோகம் உங்கள்
இழப்பை எண்ணியெண்ணி இதயம்
வரைக்கும் இறங்கிய சோகத்தால்
இன்றும் எங்கள் விழிகளில்
வழிகின்றதே கண்ணீர்த்துளிகள்…
எமக்கு ஆறுதலே நீங்கள் தானே
அப்பா ஆறுதல் எமக்கேது
ஆறுதலை தந்திடவே திரும்பி
நீங்கள் வந்திட்டய்யா கண்களில்
நீருமில்லை காத்திருக்க
பொறுமையுமில்லை உங்கள்
நினைவு மட்டும் மாறவில்லை மாறவில்லை…
வற்றாத உங்கள் நினைவுடன்
மனம் உருகி கலங்கி நிற்கின்றோம்..
உங்கள் ஆன்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்…!!!
தகவல்: குடும்பத்தினர்
