சிங்கப்பூரில் கடுமையான மொழித் திறன் குறைபாடு உள்ள சிறுமியைப் பாலியல் ரீதியில் துன்புறுத்திய முன்னாள் கிறிஸ்தவ போதகருக்குப் இன்று புதன்கிழமையன்று மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியை அவர், பலமுறை பாலியல் துன்புறுத்தல் செய்ததார் என கூறப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, குற்றவாளியின் விவரங்களை நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை.
அந்த 72 வயது போதர் தன்மீது சுமத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டைக் கடந்த ஏப்ரலில் ஒப்புக்கொண்டார்.
தண்டனை வழங்கியபோது அவர்மீது சுமத்தப்பட்டிருந்த வேறு இரு குற்றச்சாட்டுகளும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
தனது பதவியைப் பயன்படுத்தி அந்தச் சிறுமியைக் குற்றவாளி நம்பிக்கை மோசடி செய்தார் என நீதிமன்றம் கடுமையாகச் சாடியது.
