சஜித் தரப்பினருடன் இருக்காமல் தம்முடன் இணைந்து செயலாற்றுமாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அழைப்பு விடுத்தார்.
மஸ்கெலியா மொக்கா தோட்டத்தில் தொழிலாளியொருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஏற்பட்ட சர்ச்சையின்போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
”தோட்டத் தொழிலாளர்களுக்கு என்று அல்லாமல் நாட்டின் சகல மக்களுக்கும் நாங்கள் வேலைத்திட்டங்களை செய்கின்றோம்.
மலையக மக்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க வேண்டாம் என்று கூறியவர்களே, சஜித் பிரேமதாச போன்றோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு சென்று இது தொடர்பில் முறைப்பாடுகளை செய்தவர்களே, சம்பளத்தை அதிகரிக்கக்கூடாது என்றும் இவர்களே கூறினார்கள். மனோ கணேசன் போன்றோர் இவர்களுடன் அன்றி எங்களுடனேயே இருக்க வேண்டும்” என்றார்.
