கனடாவில் மூவர் மர்ம மரணம்: 17 வயது சிறுவன் கைது!

கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், புராக்வில் (Brockville) பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மூவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக 17 வயது சிறுவன் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை காலை 11:30 மணியளவில் கார்டியர் கோர்ட் (Cartier Court) பகுதியில் உள்ள வீட்டில் இருந்து அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றதை அடுத்து, அங்கு சென்ற பொலிஸார் மூன்று சடலங்களைக் கண்டெடுத்தனர்.

அந்த இடத்திலிருந்த ஆதாரங்களின் அடிப்படையில் இது ஒரு சந்தேகத்திற்குரிய மரணம் என உறுதிப்படுத்திய பொலிஸார், மேலதிக விசாரணைகளின் மூலம் நகரின் வெளிப்பகுதியில் இருந்த மற்றொரு முகவரியிலிருந்து குறித்த சிறுவனைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சிறுவன் மீது மூன்று கொலைக் குற்றச்சாட்டுகளும், பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கியதாக ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களுக்கும் குறித்த சிறுவனுக்கும் இடையே ஏற்கனவே அறிமுகம் இருந்ததாகவும், இது ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதல் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் சந்தேகநபரின் அடையாளம் வெளியிடப்படவில்லை.

இந்தச் சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்த விசாரணைகள் மிகவும் நுணுக்கமாக நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பொதுமக்கள் அனுதாபங்களைத் தெரிவிக்குமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சந்தேகநபரான சிறுவன் இன்று பிணை விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles