போர் வெற்றியின் 17ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘தேசிய வெற்றி விழா’ நாளை கொண்டாடப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில், பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ நினைவிடத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் வடக்கு, கிழக்கை சேர்ந்த போரில் உயிர்நீத்த இராணுவத்தினர் மற்றும் இராணுவ துணைக் குழுவினரின் உறவினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்பர் என்று ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் பிரிகேடியர் எஸ். பி. கொஹோன தெரிவித்துள்ளார்.
