இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த இறுதிப்போரின் போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக ஆண்டுதோறும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு நாள் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் ஜோசப் விஜய் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது அதிகாரப்பூர்வப் எக்ஸ் பதிவில், “முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்! கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்!” என்று மிக ஆழமாகத் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் உரிமைகளுக்காகவும், ஈழத் தமிழர்களின் நீதிக்காகவும் தனது கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் விஜய் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் என அவரது ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்.
