இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது.
ஓகஸ்ட் 15 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன. எனினும், போட்டிகள் நடைபெறும் திகதிகள் குறித்து இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்த டெஸ்ட் போட்டிகள் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் கீழ் நடத்தப்படவுள்ளன.
எனினும், முன்னரே நடத்தத் தீர்மானிக்கப்பட்ட இருபது – 20 போட்டிகள் தொடர்பில் இதுவரை எந்த இறுதி முடிவும் எட்டப்படடிவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
