இன்றைய தினம் போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த விமல் வீரவன்ஸ தலைமையிலான குழு சென்றது. அவர்கள் தூபி அருகே சென்று அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்தப் பதற்றத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கைதானவருடன் தானும் பொலிஸ் ஜீப்பில் வலுக்கட்டாயமாக ஏறி அமர்ந்தார் விமல் வீரவன்ஸ. இதைத் தொடர்ந்து, அவரும் கைது செய்யப்பட்டார் என்று அறிய வருகிறது.
இந்தச் சம்பவம் மே 18ஆம் திகதியான இன்று பிற்பகல் நடைபெற்றது.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறிய வருபவை வருமாறு,
விமல் வீரவன்ஸ தலைமையிலான குழுவினர் போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இன்று சென்றிருந்தனர். அங்கு அவர்கள் நினைவுத்தூபி அருகே சென்று அஞ்சலி செலுத்தத் தடை ஏற்படுத்தப்பட்டது.
இதையடுத்து, அங்கு பதற்றம் ஏற்பட்டது. அங்கு நின்ற பொலிஸார் அமைதியை ஏற்படுத்த முயன்றனர். எனினும், நினைவுத்தூபி அருகே வலுக்கட்டாயமாக விமல் வீரவன்ஸ குழுவினர் செல்ல முயன்றனர். எனினும், பொலிஸார் அதற்கு இடமளிக்காது போகவே தரையில் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, அங்கு நடந்த தள்ளுமுள்ளில் விமல் வீரவன்ஸவை பொலிஸார் நிலத்தில் இழுத்துச் சென்று வெளியேற்றினர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், அங்கு பதற்றத்தை ஏற்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கைதானவருடன் தானும் பொலிஸ் ஜீப்பில் வலுக்கட்டாயமாக ஏறி அமர்ந்தார் விமல் வீரவன்ஸ. இதைத் தொடர்ந்து, அவரும் கைது செய்யப்பட்டார் என்று அறிய வருகிறது.
