கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பரந்தன் பகுதியில் மாணவன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயம், பின்னால் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மாணவனை மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மாணவன் தலையிலும் உடலிலும் பலத்த காயங்களுக்கு உள்ளானார்.
உடனடியாக மீட்கப்பட்ட அவர் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் இன்று செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார்.
விபத்துத் தொடர்பாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கிளிநொச்சி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
