யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த ப. சுரேஷ்குமார் என்பவரே உயிரிழந்தார்.
அவர், விசாரணைக்காக நேற்று யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். பொலிஸ் நிலையம் சென்றிருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அவரை பொலிஸார் உடனடியாக மீட்டு யாழ் . போதனா மருத்துவமனையில் சேர்த்தபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
