சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இந்த மாதம் 70 கோடி அமெரிக்க டொலர் நிதி கிடைக்கப் பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதிஇ இரண்டு தவணை கொடுப்பனவுகளாகக் கிடைக்கவுள்ளது என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறைகளுக்கு ஆதரவாக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் பொருளாதார சீர்திருத்தத் திட்டங்கள் நாட்டின் நிதி நிலைத்தன்மையை வலுப்படுத்த உதவும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
