நாட்டில் ஓகஸ்ட் மாதம் வரை போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவிக்கையில்-
நவம்பர் மாதம் வரை தேவையான எரிபொருள் கொள்வனவுகளுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, அமெரிக்காவிலிருந்து 90 ஆயிரம் மெற்றிக் தொன் மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் ஒன்று இம்மாதம் 28 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது.
அத்துடன், மற்றொரு மசகு எண்ணெய் கப்பல் இம்மாதம் 31 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நாட்டில் எரிபொருள் நுகர்வு குறைந்துள்ளது – என்றும் கூறினார்.
