யாழ்ப்பாணத்தில் கடந்த 5 மாதங்களில் டெங்கு நோயால் 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில், உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2026 மே மாதம் வரை டெங்கு நோயால் 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு வருடங்களிலும் யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் உயிரிழப்புகள் பதிவாகவில்லை. அதற்கு முந்தைய வருடங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.
இனிவரும் காலங்களில் நோய்த் தாக்கம் அதிகரிக்காத வகையில் அதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் – என்றும் அவர் கூறினார்.
