கார் விபத்தில் 2 பெண்கள் பலி! குற்றத்தை மறுத்த வாயோதிபருக்கு பிணை

அண்மையில் மலேசியாவில் 75 வயதான முதியவர் ஒருவர் செலுத்திச் சென்ற கார் மோதியதில் இரண்டு சகோதரிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து கிள்ளான் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டபோது நீதிபதியின் முன்னிலையில் அவர் அக்குற்றத்தை மறுத்துள்ளார்.

இந்த விபத்து மே 15ஆம் தேதி ஜாலான் பெக்கான் பாரு பகுதியில் நடந்தது. அவர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் 61 மற்றும் 56 வயதான இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் எனக் கூறப்படுகிறது.

நீதிமன்றம் அவருக்கு 10,000 ரிங்கிட் பிணை விதித்ததைத் தொடர்ந்து அவரது ஓட்டுநர் உரிமத்தையும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்தது.

இந்த வழக்கு மீண்டும் ஓகஸ்ட் 4ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles