உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெயின் விலை 5 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்தாகும் என்ற நம்பிக்கையை அடுத்தே இன்றைய தினம் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்தது.
இன்றைய தினம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 99.41 டொலரிலிருந்து 92.49 டொலராக குறைவடைந்தது.
எனினும், ‘ஒப்பந்தம் ஒன்றை அவசரமாக நிறைவுறுத்த வேண்டாம் என்று அமெரிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தாக்குதலை நிறுத்துவது தொடர்பில் இஸ்ரேல் எந்த உத்தரவாதத்தையும் வழங்காத நிலையில் இந்த விவகாரங்களில் குழப்பம் நீடிக்கிறது. எனவே, கச்சா எண்ணெய், எரிவாயுவின் விலைகள் முன்னைய விலைக்கு திரும்புவதற்கு மேலும் காலமெடுக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
