முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
போர் வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்தார் என்று கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று திங்கட்கிழமை தலங்கம பொலிஸ் நிலையத்தில் முற்பட்டிருந்தார்.
இந்தநிலையிலே அவர் கைது செய்யப்பட்டார். அவரை கடுவலை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
