பௌத்த தேரர்களின் ஒழுக்கப் பிரச்சனைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க தர்ம நீதிமன்றம மீள நிறுவப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
1931ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க பௌத்த அற நிலையங்கள் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் திஹகொட மிதெல்லவல விகாரையில் தேசிய வெசாக் நிகழ்வு இன்று – மே 27ஆம் திகதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க மேற்சொன்னவாறு கூறினார்.
