ஈரான் மீது அமெரிக்க திடீர் தாக்குதல்!

ஈரான் மீது அமெரிக்க ராணுவம் நேற்று திடீர் தாக்​குதல்​களை நடத்​தி​யது. அப்​போது ஈரானின் பந்​தர் அப்​பாஸ் பகு​தி​யில் உள்ள முக்​கிய ஏவு​கணை தளங்​கள் அழிக்​கப்​பட்​டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஈரானின் பந்​தர் அப்​பாஸ் பகு​தி​யில் உள்ள ராணுவ நிலைகளைக் குறி​வைத்து அமெரிக்க ராணுவம் நேற்று திடீர் தாக்​குதல்​களை நடத்​தி​யது. குறிப்​பாக ஈரானின் முக்​கிய ஏவு​கணை தளங்​கள் அழிக்​கப்​பட்​டன. மேலும் ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் கண்​ணிவெடிகளை வீசிக் கொண்​டிருந்த ஈரான் ராணுவ படகு​கள் மீதும் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவ வட்​டாரங்​கள் கூறிய​தாவது:

ஹோர்​முஸ் நீரிணை பகுதியில் பறந்த அமெரிக்க போர் விமானத்தைக் குறி​வைத்து ஈரானின் பந்​தர் அப்​பாஸ் பகு​தி​யில் இருந்து ஏவு​கணை​கள் ஏவப்​பட்​டன. மேலும் அமெரிக்க போர்க்​கப்​பல்​களுக்கு அச்​சுறுத்​தலை ஏற்​படுத்​தும் வகை​யில் ஈரானின் அதி​விரைவு ரோந்து படகு​கள் ஹோர்​முஸ் நீரிணை​யில் வலம் வந்​தன. இந்த ரோந்துபடகு​கள் மூலம் கடலில் கண்​ணிவெடிகளும் வீசப்​பட்​டன.

எனவே தற்​காப்பு நடவடிக்​கைக்​காக ஈரானின் பந்​தர் அப்​பாஸ் பகுதி மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. ஈரானின் ஏவு​கணை தளங்​களைக் குறி​வைத்து அமெரிக்க போர் விமானங்​கள் குண்​டு​களை வீசின. மேலும் கத்​தார், பஹ்ரைன், குவைத்​தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​களில் இருந்து ஈரானை குறி​வைத்து ஹிமார்ஸ் ரக ஏவு​கணை​களும் வீசப்​பட்​டன.

அமெரிக்க போர்க்​கப்​பல்​களை நெருங்கி வந்த ஈரான் ரோந்து படகு​கள் மீது போர் விமானங்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. நாங்​கள் போர் நிறுத்​தத்தை மீற​வில்​லை. தற்​காப்​புக்​காகவே தாக்​குதல் நடத்​தினோம். இவ்​வாறு அமெரிக்க ராணுவ வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

இது தொடர்​பாக ஈரான் ராணுவ வட்​டாரங்​கள் கூறிய​தாவது:

ஈரான் மீது தாக்​குதல் நடத்​திய அமெரிக்​கா​வின் எப் 35 ரகபோர் விமானத்தை சுட்டு வீழ்த்தி உள்​ளோம். அந்த நாட்​டின் எம்​கியூ-9 ரீப்​பர் வகையை சேர்ந்த 2 டிரோன்​களை சுட்டு வீழ்த்​தி​யிருக்​கிறோம். ஹோர்​முஸ் நீரிணையை யார் நெருங்​கி​னாலும் தாக்​குதல் நடத்​து​வோம்.

தற்​போது அமெரிக்​கா​வின் தாக்​குதலுக்கு ஹோர்​முஸ் நீரிணை, பந்​தர் அப்​பாஸ் எல்லை வரம்​புக்​குள் மட்​டுமே தகுந்த பதிலடியை கொடுத்​திருக்​கிறோம். இனிமேலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​னால் ஒட்​டுமொத்த வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​கள் மீது மிகப்​பெரிய தாக்​குதல் தொடங்​கப்​படும்.இவ்​வாறு ஈரான் ராணுவ வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles