தோல்வியால் அணி தலைமையை துறந்தார் ரிஷப் பண்ட்

ஐ. பி. எல். 2026 தொடரில் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து அந்த அணியின் தலைவர் பதவியிலிருந்து ரிஷப் பண்ட் விலகியுள்ளார்.

அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகும் பண்ட்டின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளதாக லக்னோ அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இம்முறை நடந்த தொடரில் லக்னோ அணி விளையாடிய 14 போட்டிகளில் 4 வெற்றிகளுடன், 8 புள்ளிகளைப் பெற்று கடைசி இடத்தைப் பிடித்து ஏமாற்றமளித்தது.

இந்தத் தொடரில் துடுப்பாட்டத்திலும் ரிஷப் பண்ட், 14 போட்டிகளில் 138.05 என்ற ஓட்ட வீதத்தில் 312 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.

கடந்த இரண்டு தொடர்களில் லக்னோ அணியின் தலைவராக இருந்த பண்ட் 10 வெற்றிகளையும் 18 தோல்விகளையும் பதிவு செய்துள்ளார். துடுப்பாட்டத்தில் மொத்தம் 581 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார்.

ரிஷப் பண்ட் விலகியதை அடுத்து, அணியை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தவுள்ளதாகவும்லக்னோ அணியின் புதிய தலைவர் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்றும் அணியின் கிரிக்கெட் பணிப்பாளர் ரொம் மூடி தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles