ஈரானிய மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற உறுதி கிடைக்க வேண்டும். அதுவரையில் அமெரிக்காவுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் எந்தவோர் ஒப்பந்தத்தையும் ஏற்க முடியாது என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முஹமட் பாகர் காலிபாப் தெரிவித்துள்ளார்.
சபாநாயகராக மீண்டும் தெரிவானமையைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘எதிரிகளின் வார்த்தைகள் மற்றும் வாக்குறுதிகளில் நம்பிக்கை இல்லை. உறுதியான முடிவுகளே ஈரானின் அளவுகோல். ஈரானிய மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன என்பது எங்களுக்கு உறுதியாகும் வரை எந்தவோர் ஒப்பந்தத்துக்கும் நாம் ஒப்புதல் அளிக்க மாட்டோம்’, என்றும் கூறியுள்ளார்.
பிராந்தியத்தில் நிலவும் போர்ப் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சுகள் நடைபெற்று வரும் நிலையில்இ ஈரானின் உயர்மட்டத் தலைவரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
