யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்கார கூடு உடைப்பு

யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்கார கூடு, நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களால் பல்கலைக்கழக வளாகத்தினுள் வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருந்த வெசாக் கூடே நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாதோாரால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற கோப்பாய் பொலிஸார் தடயங்களைச் சேகரித்துள்ளதுடன், வெசாக் கூடுகளைச் சேதப்படுத்தியவர்களைக் கண்டறிவதற்காக தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles