எலோன் மஸ்க் ஒரு மேதை – ஆபிரிக்க தலைவர்கள் முன்னிலையில் புகழ்ந்து பேசிய புடின்

பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க்கை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒரு மேதை என்று புகழ்ந்து பேசியுள்ளார்.

அவரது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய அமைப்புக்கு பதிலடியாக ரஷ்யா தனது திட்டத்தை இப்போதுதான் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஸ்டார்லிங்கின் ஒரு பதிப்பை, ரஷ்யாவுடனான போர் முழுவதும் உக்ரைன் இராணுவம் ஆளில்லா விமானச் செயல்பாடுகள் மற்றும் போர்க்களத் தொடர்புகளின் முக்கிய அங்கமாகப் பயன்படுத்தி வருகின்ற நிலையில் புட்டினின் இந்த அறிவிப்பு முக்கியமான விடயமாக பார்க்கப்படுகிறது.

ரஷ்யா தனது சொந்த ‘ஸ்டார்லிங்க்’ (Starlink) போன்ற அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்காக 30இற்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளதாகவும் டிஜிட்டல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மக்ஸுத் ஷடாயேவ் Maksut Shadayev, அறிவித்திருந்தார்.

இதன்போது அவரை இடைமறித்து பேசிய புடின் –

“ஒரு நிமிடம், இது நமது முதல் படி என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எலோன் மஸ்க் ஒரு மேதை, அவர் உண்மையிலேயே ஒரு மேதைதான்,” என்று புடின் கூறியுள்ளார்.

புடின் இவ்வாறு கூறும்போது ஆப்பிரிக்க தலைவர்கள் குழுமியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles