அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில் தொடர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரும் தன்னைத்தானே சுட்டு இறந்தார் என்றும் பொலிஸார் கூறினர்.
பாதிக்கப்பட்டவர்கள், மஸ்கடைனைச் சேர்ந்த 52 வயதான ரியான் வில்லிஸ் மெக்ஃபார்லேண்ட் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரின் குடும்ப உறுப்பினர்கள் என்று நம்பப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
