லண்டன் மீது ஏவுகணை தாக்குதல்: நோர்வே வெளியிட்ட பரபரப்பு தகவல்!

ஆர்டிக் பகுதியில் உள்ள ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை கைப்பற்ற ரஷ்யா போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த பகுதி கைப்பற்றப்பட்டால், லண்டன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கான அனைத்து சாத்தியமான வாய்ப்புகளும் உள்ளதாக நோர்வேயின் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார்.

நோர்வேயின் பிரதான நிலப்பரப்பிற்கும் ஸ்வால்பார்ட் (Svalbard) தீவுக்கூட்டத்திற்கும் இடையே உள்ள சுமார் 400 மைல் அகலமுள்ள பகுதியை கைப்பற்ற ரஷ்யா தயாராகி வருவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளில் முகாமிட்டுள்ள ரஷ்யாவின் சக்திவாய்ந்த வடக்குக் கடற்படை, அணுசக்தித் தாக்குதல் திறன்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், வடக்கில் உள்ள நேட்டோ கடல் பகுதிகளில் தனது செயல்பாடுகளை விரிவுப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles