வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் ஏ-9 பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வவுனியா-யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் கனகராயன்குளம் பெரியகுளம் பகுதிக்கு அருகில் பாதசாரிகளாக நடந்து சென்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்களை, அதே திசையில் வேகமாக வந்த கார் ஒன்று மோதித் தள்ளியுள்ளது.
மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட இரு இளைஞர்களும், படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த இரண்டு இளைஞர்களும் கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
விபத்தை ஏற்படுத்திய கார் மற்றும் அதன் சாரதி தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் யாழ்.மாவட்ட முன்னாள் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் மகனான தர்சன் (வயது-40) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
