உலகக் கிண்ண பாதுகாப்புப் பணியில் இயந்திர நாய்கள்!

2026 உதைபந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிக்காக மெக்ஸிக்கோ வித்தியாசமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

உலகக் கிண்ணப் போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளில் கே. 9எக்ஸ். எனப்படும் இயந்திர நாய்கள், கமெரா, இரவுக் காட்சி வசதி மற்றும் நேரடி காணொலி ஒளிபரப்புடன் செயல்படுகின்றன.

ஆபத்தான பகுதிகளுக்குள் முதலில் நுழைந்து நிலைமையை பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்கும் திறன் இவற்றுக்கு உள்ளது.
இது மட்டுமல்ல.

வானில் பிளக் ஹவ்க் ஹெலிகொப்டர்களும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ட்ரோன்கள், எதிர்-ட்ரோன் தொழில்நுட்பம், ஆயிரக்கணக்கான பாதுகாப்பு பணியாளர்களும் களமிறக்கப்படவுள்ளனர்.

உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி மட்டும் அல்ல. பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தையும் உலகுக்கு காட்டும் மேடையாக மாறியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles