1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவையின் நிர்வாகத்தை கடற்படையிடம் ஒப்படைக்க முயற்சிப்பதாகக் கூறி, நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று – ஜூன் 4ஆம் திகதி நடந்த இந்தப் போராட்டத்தில் 10 ஆண்டுகளாக உயிர்களைக் காப்பாற்றும் சேவையை இராணுவ மயமாக்க அனுமதிக்க முடியாது’ என்றுகூறி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதேவேளை, நிரந்தர நியமனம் மற்றும் இடமாற்றப் பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு கோரினர்.
போராட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் ஊழியர் பிரதிநிதிகளுக்கு அதிகாரிகளுடன் பேச்சு நடத்த சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது.
