பல்வேறு பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்பனை செய்வதற்காக தயாரிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொழும்பு தெமட்டகொடையில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்த ஆயுதங்களை பேலியகொடை பொலிஸார் கைப்பற்றினர்.
இந்த ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் செவனகல பிரதேசம் மற்றும் அதனை அண்டிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த கைத்துப்பாக்கிகள் வேறு இடத்தில் தயாரிக்கப்பட்டு, இரண்டு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டு, தெமட்டகொடையில் உள்ள இரண்டு மாடிக்கட்டிடத்தின் மேல் தளத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
குறித்த வீடு மூன்று மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு எடுக்கப்பட்டு ஓர் இரகசிய பதுங்குமிடமாக பயன்படுத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இதேநேரம், அந்த வீட்டை வாடகைக்கு எடுத்ததுடன், அங்கு தங்கியிருந்த தம்பதியர் மாயமாகியுள்ளனர் என்றும் அவர்களை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
