மயிலிட்டி மக்கள் இன்றைய தினமும் தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் து. ரவிகரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணயின் செயலாளர் செ. கஜேந்திரன் ஆகியோரும் பங்கேற்றனர்.
இன்று 7ஆவது வாரமாக பலாலி கொமாண்டோ பங்களா முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்றது.
1990ஆம் மயிலிட்டி மக்கள் இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்தனர். இதைத் தொடர்ந்து அந்த மக்களின் காணிகளை இராணுவம் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவித்தது. போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த போதிலும் இந்தக் காணிகள் இன்றுவரை விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
