மனைவி, காதலிக்கே மயக்க மருந்து: பாலியல் குற்ற கும்பல்!

நெதர்லாந்தில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் நால்வர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் தங்களின் மனைவிகள் அல்லது நெருங்கிய உறவிலிருந்த பெண்களுக்கே மயக்க மருந்து கொடுத்துஇ அவர்கள் சுயநினைவற்ற நிலையில் இருக்கும்போது பாலியல் செயல்களில் ஈடுபட்டு, அதனை காணொலியாக பதிவு செய்தனர் என்று நெதர்லாந்து பொலிஸார் தெரிவித்தனர்.

ரொட்டர்டாம் நகர பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளில் கணினிகள், கைப்பேசிகள், பென்ட்ரைவ்கள், மயக்க மருந்துகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசாரணைகளின் போது, சந்தேகநபர்கள் தனியார் சமூக ஊடகக் குழுக்களில் உறுப்பினர்களாக இருந்து, பெண்களுக்கு எவ்வாறு மயக்க மருந்து கொடுப்பது, அவர்களை பாலியல் ரீதியாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பான விளக்கங்களையும் கொடுத்துள்ளனர்.

இந்த வழக்கில் மேலும் நால்வர் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்று பொலிஸார் எதிர்வரும் நாட்களில் மேலும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 முதல் 51 வயதுக்குட்பட்ட இந்த சந்தேகநபர்கள் நெதர்லாந்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

இந்த குற்றச்செயல்கள் குறித்து தகவல்கள் முதலில் ஜேர்மனி மற்றும் பிரித்தானிய பொலிஸாரால் கண்டறியப்பட்ட இரகசிய சமூக ஊடகக் குழுக்களின் மூலம் வெளிச்சத்துக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், பிரான்ஸில் தனது முன்னாள் கணவரால் பல ஆண்டுகளாக மயக்க மருந்து கொடுக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக உலகளவில் கவனம் பெற்ற சிசெல் பெலிக்கா வழக்கை நினைவூட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் இணையவழி குற்ற வலையமைப்புகள் தொடர்பான புதிய அச்சங்களை இந்த வழக்கு மீண்டும் எழுப்பியுள்ளது. விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles