யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் நேற்று (23) அடையாளம் காணப்பட்ட மழை அங்கியுடன் கூடிய சிறுவனின் எலும்புக்கூடு, எதிர்வரும் ஓகஸ்ட் 4ஆம் திகதிக்குப் பின்னரே அகழ்ந்து எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த எலும்புக்கூடு தொடர்பில் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இந்த எலும்புக்கூடு சட்ட ரீதியாக புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற அனுமானம் காணப்படுவதால், அதுகுறித்து தகவல்கள் தெரிந்தவர்கள் நீதிமன்ற பதிவாளர், சட்டத்தரணி ஊடாக நீதிமன்றம் அல்லது காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எலும்புக்கூடு தொடர்பான தகவல்கள் கிடைக்குமாயின், செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான மேலதிக உண்மைகள் வெளிக்கொணரப்படலாம் என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
