இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவின் பின்னூட்டப் பிரிவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை பதவி விலகுமாறு அறிவுறுத்துமாறு ஏராளமானோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி தொடரப்பட்ட போராட்டங்கள், தற்போது சர்வதேச அளவில் கவனம் பெறத் தொடங்கியுள்ளன.
இம்மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்ற மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடித் தாக்குதலுக்குப் பிறகு இப்போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்திய மாணவர்களின் குரலுக்குச் செவிசாய்க்கவும்”, “உங்கள் நண்பரான பிரதமர் மோடியிடம் ஜூலை 20 போராட்டம் குறித்துக் கேட்கவும்” போன்ற பல்வேறு கருத்துகளை இந்தியப் பயனர்கள் மெலோனியின் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
