அண்ணன் வெட்டியதில் தம்பி உயிரிழப்பு!

பணக் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் தம்பியாரை அண்ணன் வெட்டிப் படுகொலை செய்தார் என்று கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தென்னிலங்கையின் மாத்தறைஇ திக்வெல்ல பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

இதில், மூன்று பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய நபரே உயிரிழந்தார். மது போதையிலிருந்த அண்ணன் தம்பியின் வீட்டுக்குள் கத்தியுடன் நுழைந்தார் என்றும் இதன்போது, இருவருக்கும் தர்க்கம் ஏற்பட்ட நிலையில் அண்ணன் தம்பியாரை வெட்டினார் எனவும் கூறப்படுகிறது. இதில், தம்பியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தையடுத்து 45 வயதான அண்ணனை மாத்தறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles