விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை சபையில் உரையாற்றிய அவர்,
விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் செயல்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. இருப்பினும் யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதற்கான உரிமை காணப்படுகிறது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் பாடலுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி இளைஞன் தொடர்பில் பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபருடன் கலந்துரையாடவுள்ளார். அதன் பின்னர் சாதகமான தீர்மானம் எடுக்கப்படும் – என்றார்.
