போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறாதீர்: ஈரான், இஸ்ரேலிடம் பிரிட்டன் வலியுறுத்து!

இஸ்ரேல், ஈரானுக்கிடையில் அதிகரித்துள்ள ராணுவ மோதல்கள் குறித்து பிரிட்டன் வெளிவிவகாரச் செயலர் யுவீற் கூப்பர் கவலை தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் தற்காலிக போர்நிறுத்தத்தை மதித்து நடக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

“மீண்டும் ஒரு மோதல் வெடிப்பது யாருடைய நலனுக்கும் உகந்தது அல்ல. இதனை நேரடியாகத் தெரிவிப்பதற்காக நான் ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் பேசினேன்,” என்று அவர் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் தெரிவித்தார்.

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதை அவர் வரவேற்றார்.

எனினும், இன்று காலை தெற்கு லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களை “விகிதாசாரமற்றவை” என விவரித்து அவர் கண்டனம் தெரிவித்தார்.

அதேவேளையில், இஸ்ரேலிய இராணுவத்திற்கு எதிராக ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதல்களையும் அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles